படத்துக்காக நிர்வாணமாக நடித்தேன் என்று நடிகர் பிரஜின் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பிரஜின். இவர் முதன் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அந்த சமயங்களில் பிரஜின் அனைவரின் மனதையும், குறிப்பாக பெண்கள் மனதை கொள்ளையடித்தவர் என்றே சொல்லலாம். பின்னர் சினிமாவில் துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கினார். ஜீவா நடித்த டிஷ்யூம் திரைப்படம் தான் இவர் நடித்த முதல் படம்.
பின் திரைத்துறை வாய்ப்புகள் சரியான முறையில் அமையாத காரணத்தினால் பிரஜின் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சி சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தது. இதையடுத்து பிரஜின் அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி வெற்றிகள் கிடைக்கவில்லை.
ப்ரஜின் குறித்த தகவல்:
மேலும், இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அதன்பிறகு இவர் சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மலையாள சேனலில் தொகுப்பாளாராக பணியாற்றிய சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்தார். இருவரின் திருமணத்திற்கு பிறகு சாண்ட்ராவும் தமிழ் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் விஜய் தொலைகாட்சியின் சின்னத்தம்பி சீரியலில் நாயகனாக நடித்தார் பிரஜின்.
‘ D3’ படம்:
அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கியது. பின் அன்புடன் குஷி என்ற சீரியலில் பிரஜின் நடித்து இருந்தார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக இவர் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது பிரஜின் அவர்கள் ‘ D3’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சஸ்பெண்ஸ், திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி இயக்கி இருக்கிறார். பீமாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம்- ஜே கே எம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.
படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி:
கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக் மற்றும் படக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் பிரஜின் கூறியிருந்தது, நான் சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறேன். இதுவரை நான் 24 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனாலும், எனக்கான அங்கீகாரத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறேன்.
படம் குறித்து ப்ரஜின் சொன்னது:
எனக்கான இடத்தை இன்னும் நான் அடையவில்லை. நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை. பாதியில் நின்று போனதில்லை. மேலும், நான் முதன் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்திருக்கிறேன். என்னுடைய அப்பா காவல்துறையில் இருந்தவர் தான். அவருடைய துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாகவே இல்லை. இது ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்த படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்திருக்கிறேன். மேலும், இந்த படத்திற்காக இயக்குனர் கேட்டுக் கொண்டதனால் நான் நிர்வாணமாக நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.