திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர் – ஆயுத எழுத்து சீரியல் நடிகை கொடுத்த பதில். (இப்படி இருந்தா யார் பண்ணிப்பா)

0
904
saranya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் ராஜா ராணி, அரண்மனை கிளி, சின்னத்தம்பி, நெஞ்சம் மறப்பதில்லை என்று சினிமா பட பாணியில் பெயர்களை வைத்து ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த வரிசையில் ஆயுத எழுத்து என்ற படத்தின் தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பாகி வந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவந்தது . இந்த தொடரில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சரண்யா.

-விளம்பரம்-

நடிகை சரண்யா ஒன்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு புதிதானது அல்ல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரண்யா ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். கடந்த சில ஆண்டு நிறைவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடர் 358 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

- Advertisement -

ஆரம்பத்தில் கலைஞர் செய்திகளுக்கு செய்தி நிருபராக இருந்து வந்த இவர். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால் அந்த தொலைக்காட்சியிலும் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் .பின்னர் ஜீ தமிழ் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்துள்ளார் நடிகை சரண்யா.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டதர்க்கு வீடியோ மூலம் பதில் அளித்தார். அதில், இதை பார்த்த ரசிகர் ஒருவர், அப்போ என்ன தான் பண்ணுவீங்க என்று கேட்டதற்கு லவ் பண்ணுவேன்னு பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement