உடன் நடித்த நடிகருடன் ஸ்ரீத்து கிருஷ்ணனுக்கு காதலா – வீடியோவை கண்டு ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

0
821
sreethu
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீத்து. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இந்த சீரிய முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த சீரியலில் ஆசிரியராக நடிகர் ஸ்டாலின் நடித்திருந்தார். இந்த 7c சீரியல் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்கள், ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில் அமைந்து இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீத்து பல தொடர்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என மாறி மாறி சீரியல்களில் நடித்து வந்திருந்தார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த சீரியல் கிராமத்து பின்னணியில் உருவாகி வந்த கதையாகும். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : வீட்டுக்கு வந்த புது வரவு – மகிழ்ச்சியில் மைனா நந்தினி – யோகேஷ் பதிவிட்ட புகைப்படம். ரசிகர்கள் வாழ்த்து மழை.

ஸ்ரீத்து நடித்த சீரியல்:

இந்த சீரியலில் ஸ்ரீத்து அவர்கள் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்பட்டும், நேர்மையான சப் கலெக்டராகவும் நடித்து இருந்தார். பின் திடீரென்று ஸ்ரீத்து இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த அம்ஜித்தும் விலகி விட்டார். அவர்களுக்கு பதிலாக சரண்யா , ஆனந்த்இருவரும் இந்திரா மற்றும் சக்திவேல் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீத்து குறித்த தகவல்:

நடிகர்கள் மாறினாலும் சீரியல் நன்றாக சென்று இருந்தது. மேலும், இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களை ஸ்ரீத்து கவர்ந்தார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதற்கு பிறகு இவர் பெரிதாக எந்த ஒரு சீரியலில் நடிக்க வில்லை. இருந்தாலும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அதில் அவர் தான் அடிக்கடி எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

ஸ்ரீத்து-நிகில் நடனமாடிய வீடியோ:

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீத்து பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது ஸ்ரீத்து அவர்கள் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் அம்மயறியாதே என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் நிகில் என்பவருக்கு ஜோடியாக ஸ்ரீத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த பான் இந்திய படமான கேஜிஎப் 2 படத்தில் இருந்து வெளிவந்த மெகபூபா பாடலுக்கு இருவரும் நடனமாடி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் எழுப்பிய கேள்வி:

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நிகில் தான் உங்களுடைய காதலரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இருவரும் காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் காதலிப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு இவர்களும் எந்த பதிலையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement