வீட்டுக்கு வந்த புது வரவு – மகிழ்ச்சியில் மைனா நந்தினி – யோகேஷ் பதிவிட்ட புகைப்படம். ரசிகர்கள் வாழ்த்து மழை.

0
517
myna
- Advertisement -

மைனா நந்தினி புதிய கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் நந்தினி. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
myna

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இதற்கு இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : பொன்னியின் செல்வன் படத்தின் பாகுபலியுடன் ஒப்பிட்டு கேலி செய்ய துவங்கிய தெலுங்கு ரசிகர்கள் – தமிழ் ரசிகர்களின் பதிலடி.

மைனா நந்தினி நடித்த படங்கள்:

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 3 படத்தில் மறைந்த நடிகர் விவேக்கு ஜோடியாக மைனா நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருந்தது. அதேபோல் இவர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படம்:

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது மைனா நந்தினி அவர்கள் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ரொம்ப பிசியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருகிறார்.

மைனா நந்தினி வாங்கிய புது கார்:

இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நிலையில் நந்தினி- யோகேஷ் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அதாவது, இந்த ஜோடிகள் சமீபத்தில் சொந்தமாக ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர். இதை நந்தினி தன்னுடைய இன்ஸ்டாவில் ஹேர் செய்திருக்கிறார். அந்த புகைபடத்தில் மாலையுடன் நிற்கும் கார் அருகில் சந்தோஷத்தில் தன் கணவருக்கு நந்தினி கண்ணத்தில் முத்தம் தருகிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement