திடீரென பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலை விட்டு விலகும் நடிகை? காரணம் இது தானா – அதிருப்தியில் ரசிகர்கள்

0
193
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை விட்டு முக்கிய பிரபலம் விலக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. இந்த தொடர் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அப்பாவாக ஸ்டாலினும், அவருக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வெங்கட், ஆகாஷ் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த தொடரில் ராஜ்குமார் மனோகரன், வி ஜே சரண்யா துரடி, ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், ஷாலினி, சத்யா சாய் உட்பட பலர் நடித்து வருகின்றனர்கள். சமீபத்தில் தான் வசந்த் இந்த தொடரில் இருந்து விலக, அவருக்கு பதில் வெங்கட் இணைந்துள்ளார். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் மகன்கள், தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து இருப்பதால் பெருமிதமாக நினைக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள் எதிர்பாராத விதமாக காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் ரொம்பவே மனமுடைந்து போகிறார். பின்பு மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைக்கிறார். தற்போது சீரியல் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் மொத்த குடும்பமே பதறிப் போய் இருந்தது. கோமதி- ராஜி இருவருமே அப்பத்தாவின் நிலையை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால், அப்பத்தாவிற்கு ஒன்றுமே இல்லை. அவர் தன்னுடைய மகன்களின் சண்டையை சமாளிக்க தான் இந்த மாதிரி நாடகம் நடத்திருக்கிறார். பின் தன்னுடைய அம்மாவிற்கு எதுவும் இல்லை தெரிந்து கோமதி சந்தோஷப்பட்டு அவருக்காக சாப்பாடு சமைத்துக் கொடுத்தார்.

சீரியல் கதை:

கதிரின் மூலம் தன்னுடைய அம்மாவை கோமதி போய் பார்த்தார். இந்த விஷயம் அறிந்த கோமதி அண்ணன்கள் பயங்கரமாக வீட்டில் கத்தி சத்தம் போட்டார்கள். உடனே பாண்டியன் கோமதிக்கு ஆறுதலாக பேசியிருந்தார். இந்த பஞ்சாயத்து முடிந்தவுடன் தங்கமயில் அப்பா, அம்மா இருவருமே பாண்டியனிடம் தங்கள் மகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதனால் பாண்டியன் பயங்கரமாக கோபப்படுகிறார். அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷாலினி.

-விளம்பரம்-

ஷாலினி குறித்த தகவல்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கதாநாயகி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டு இருந்தார். அதோடு இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்று ஆசை. ஆனால், இவருக்கு சின்ன வயதிலேயே இவரின் பெற்றோர்கள் திருமணம் செய்து விட்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஷாலினி தன்னுடைய கனவை நிறைவேற்ற போராடிக் கொண்டிருக்கிறார். அதற்கு இவருடைய கணவரும் உறுதுணையாக இருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் ஷாலினியின் மாமியார், மாமனார் ஆகியோரும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

சீரியலை விட்டு விலக காரணம்:

மேலும், கதாநாயகி நிகழ்ச்சியில் இவரால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் முதல் ரன்னர் அப் இடத்தை பிடித்திருந்தார். இதை அடுத்து இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென நடிகை ஷாலினி சீரியலை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலக இருக்கிறாராம். ஆனால், இது குறித்து ஷாலினி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலுமே வெளியாகவில்லை. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலுமே, ரசிகர்கள் ஷாலினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement