நிதின் கட்கரியை விட ஒரு மாதத்தில் யூடுயூபில் அதிகம் சம்பாதிக்கும் மணிமேகலை – பிரியங்கா. எத்தனை லட்சம்னு பாருங்க.

0
2062
mani
- Advertisement -

சமூக வலைத்தளங்கள் என்ற ஒன்று உருவான தொடங்கியதிலிருந்தே பல பேர் அதில் தான் அதிகமாக சம்பாதித்து வருகிறார்கள். அதிலும் சமீபகாலமாக பல சமூக வலைத்தளங்கள் புதிது புதிதாக உருவாகி வந்து கொண்டிருப்பதால் அதில் பல பேர் வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல தொகுப்பாளினி மத்திய அமைச்சரை விட அதிகமாக யூடியூப் சேனல் மூலம் சம்பாதிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் மாதம் 4 லட்சம் சம்பாதிக்கிறார் என்று கூறியிருக்கிறாராம். ஆனால், உண்மையிலேயே டிவி பிரபலங்கள் தான் யூடியூப் சேனல் மூலம் இதை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன. இவர்களெல்லாம் டிவி மூலம் சம்பாதிப்பதை விட யூடியூப் சேனல் மூலம் தான் அதிக வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது முதலிடத்தில் இருப்பது ஆங்கர் பிரியங்காவும், மணிமேகலையும் தனி.

இதையும் பாருங்க : வெப் சீரிஸில் நடிக்கவரும் ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் – யார் பாருங்க.

- Advertisement -

இவர்கள் நிதின் கட்கரி சம்பளத்தை விட அதிகமாக வாங்குகிறார்கள் என்று சொல்லலாம். பிரியங்கா யூடியூப் சேனல் மூலம் மாதம் சுமார் 7 லட்சம் வரை சம்பாதிக்கிறார். மணிமேகலை 6 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அப்படி என்ன தான் இவர்கள் யூடியூபில் சம்பாதிக்கிறார்கள் என்றால் ஒன்னும் இல்லைங்க. காலையில் எழுந்து டிபன் செய்வதிலிருந்து நைட் டின்னர் முடித்து தூங்கும் வரை என கிடைக்கறதை எல்லாம் கன்டென்டா போடுறாங்க. அவங்களுக்கு கண்டதெல்லாம் கன்டென்டு தான்.

சமீபத்தில் கூட பிரியங்கா தொகுப்பாளினி ஹாஸ்பிடல் இருக்கும் போது கூட அதை ஒரு விடியோவாக்கி போட்டிருந்தாங்க. அதேபோல மணிமேகலை கன்டென்டுக்காக கொஞ்சம் சிரமப்படுகிறார் என்று சொல்லலாம். தன்னுடைய கணவரை கூட்டிட்டு வித்தியாசமான இடங்கள், வித்தியாசமான மனிதர்களை சந்தித்து அவர்களுடன் பேசுவது, விளையாடுவது, சமைப்பது போன்ற பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறர்கள். இவங்க மட்டும் இல்லைங்க இதே மாதிரி நிறைய டிவி பிரபலங்கள் யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement