வெறும் 50 எபிசோடுகளுக்குள் நிறுத்தப்பட்ட வைதேகி காத்திருந்தால் – இயக்குநர் உருக்கமான பதிவு

0
522
vaidhegi
- Advertisement -

கொரோனா தொடங்கிய காலத்திலிருந்தே மக்கள் அதிகம் சின்னத்திரையை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரஜின். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த டிஷூம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சா பூ திரி, மணல் நகரம், பழைய வண்ணார் பேட்டை, ஆண்தேவதை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து இருந்த லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி என்னதான் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த இது ஒரு காதல் கதை என்ற சிறிய மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சீரியலில் இருந்து விலகிய பிரஜன் :

மேலும், இந்த சீரியல் வெளியாகி சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்து வருகிறார். மாறுபட்ட கதைக்களம் கதை கொண்ட இந்த சீரியல் மக்களின் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ப்ரஜின் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியது. இது குறித்து ப்ரஜின் கூறியிருப்பது, சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எண்ணி தான் கமிட்டானேன். ஆனால், பட வாய்ப்புகள் பல வந்து இருக்கிறது. அதனால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரஜன் சொன்ன விளக்கம் :

இந்த படங்கள் ஏற்கனவே கமிட் ஆனவை என்பதால் சீரியல் மற்றும் படங்களின் படப்பிடிப்பிற்கு தேதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீரியல் இருந்து விலக இருக்கிறேன். வேறு வழியில்லாமல் சீரியல் குழுவிடம் இந்த விஷயத்தை அப்படியே சுமுகமாக சொல்லிவிட்டு தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் வைதேகி காத்திருந்தாள் சீரியல் நல்ல ப்ராஜெக்ட். உடன் வேலை செய்த அனைவருமே நன்றாக பழகினார்கள். ஜாலியான யூனிட் ஆனாலும் என்னால் இதில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிரஜனுக்கு பதில் வந்த முன்னா :

இப்படி ஒரு நிலையில் பிரஜனுக்கு பதில் சீரியல் நடிகர் முன்னா கமிட் ஆகிஇருந்தார். சன் டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்த முன்னா கமிட் ஆகி இருந்தார். இவர விஜய் டிவியின் ராஜ பார்வை தொடரிலும் நடித்துள்ளார். கடந்த மார்ச் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் டிசம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இவர் கமிட் ஆன சில நாட்களிலேயே வைதேகி காத்திருந்தாள் தொடரும் நிறுத்தப்பட்டுவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் தற்போது வெறும் 50 எபிசோடுகளுக்குள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இயக்குனரின் உருக்கமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்த சீரியலின் இயக்குனர் ‘
வாழ்க்கைப் பயணத்துல சுவாரஸ்யமான விஷயமே பல திருப்பங்கள் தான். இன்னும் கூடுதலான பாஸிட்டிவ் எனர்ஜியோட அடுத்த எதிர்பாராத சுவாரஸ்யத்தை தேடி பயணிக்கிறேன். எனது பயணத்தில் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கும், என்னுடன் பயணித்த,… பயணிக்கும் அனைவருக்கும் என்றென்றும் நன்றிகள் பல’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement