இது லாக்டவுனுக்கு முன் எடுத்த புகைப்படம் – லாக்டவுனுக்கு பின் ரம்யா எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
3708
ramya
- Advertisement -

சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா.

-விளம்பரம்-

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதையும் பாருங்க : சன் டிவி சீரியலில் யாஷிகா – அவரே பகிர்ந்த புதிய ப்ரோமோ வீடியோ.

- Advertisement -

தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா. அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக ஆடை படத்தில் நடித்திருந்த ரம்யா, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் இந்த லாக்டோன் சமயத்தில் உடற்பயிற்சிகளை செய்து ஐந்து கிலோ வரை எடையைக் குறைத்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் லாக்டவனுக்கு முன்னிருந்த உடலமைப்பின் புகைப்படத்தையும் தற்போது இருக்கும் உடலமைப்பின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார் ரம்யா

-விளம்பரம்-
Advertisement