சன் டிவி சீரியலில் யாஷிகா – அவரே பகிர்ந்த புதிய ப்ரோமோ வீடியோ.

0
4250
yashika

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சிரியலில் கமிட் ஆகியுள்ளார்.

இதையும் பாருங்க : அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்விட்ட நபர் கைது – யாருன்னு பார்த்தா இவரு தான்.

- Advertisement -

சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கரி, சிப்பு சூரியன், வடிவுக்கரசி என்று பலர் நடித்து வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தான் தற்போது யாஷிகா ஆனந்த் கமிட்டாகியிருக்கிறார்.

ஆம், அதுவும் ஒரு எபிசோடுக்கு அம்மணிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. யாஷிகா ஆனந்த் நடிக்கும் ரோல் குறித்து விசாரித்ததில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னர் நன்றாக போய்க் கொண்டிருக்கும் சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement