படம் வராதுன்னு சொன்னாங்க, தியேட்டர் ஜன்னல ஒடச்சாங்க – தற்போது வைரலாகும் விஜய் போட்ட ட்வீட். படு மாஸ்ஸான சம்பவம்.

0
1208
kathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். சமீபகாலமாகவே இவரது படங்களில் அரசை எதிர்த்து பல்வேறு வசனங்கள் இருந்ததால் இவரது படங்கள் வெளியாகும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிரச்சனை தற்போது ஆரம்பித்தது கிடையாது தலைவா படத்தின் போதே நடிகர் விஜயின் படங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது. தலைவா படத்திற்கு பின்னர்தான் விஜய்யின் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான பிகில் படம் வரை இந்த பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை. போக்கிரி படத்திற்கு பின்னர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் குருவி வில்லு வேட்டைக்காரன் சுறா போன்ற பல்வேறு படங்கள் தொடர்ந்து தோல்விப் படமாக அமைந்தது அதன் பின்னர் இவர் நடித்த காவலன் வேலாயுதம் நண்பன் போன்ற படங்கள் வெற்றி பெற்றது ஆனால் விஜய்க்கு இடையில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது துப்பாக்கி திரைப்படம் தான் துப்பாக்கி திரைப்படத்திற்கு பின்னர் தலைவா ஜில்லா என்று இரண்டு தோல்வி படங்களை சந்தித்த விஜய்க்கு ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்தது கத்தி திரைப்படம் தான்.

- Advertisement -

அதிலும் கத்தி படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அதிலும் குறிப்பாக கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனங்கள் பல்வேறு அரசியலை விமர்சித்த இருந்தது. அதே போல இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்ததால் இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. லைகா நிறுவனம் இலங்கையை சேர்ந்த நிறுவனம் என்பதால் அந்த படத்தில் விஜய் நடிக்க கூடாது என்று ‘கத்தி’ படத்தை வெளியிட பல எதிர்ப்புகள் எழுந்தது.

இருப்பினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் கத்தி திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வெளியானது. பல்வேறு எதிர்பார்புகளுக்கும் மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது ட்வீட் செய்த விஜய் ‘படம் வராதுன்னு சொன்னாங்க தியேட்டர் ஜன்னலை உடைத்து 12 மணி வரைக்கும் டிக்கெட் கொடுக்க எண்ணி 12 வது நாள் 100 கோடி ன்னு சொன்னாங்க’ என்று துப்பாக்கியில் பேசிய வசனம் போன்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அப்போது அந்த ட்வீட் மிகவும் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இன்றுடன் துப்பாக்கி படம் வெளியாகி 6 வருடங்கள் ஆன நிலையில் விஜய் பதிவிட்ட அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ட்விட்டரில் தற்போது #kaththi என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Advertisement