தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கடந்த 20வது ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் பிஸ்ட் பாடத்தை தொடர்ந்து வம்சி படிப்பாளி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தளபதி 66 வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அதிக காட்சிகளை ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடைசி சண்டை மற்றும் டூயட் காட்சிகள் சென்னையில் படமாகப்பட்டு படமானது முடியும் தருவாயில் உள்ளது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக புஷ்ப்ப பட நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த் ,பிரபு ,ஷாம் , யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது மேலும் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்திருக்கிறார்.
படமானது ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலானது வெளியாகியிருந்தது. ஆனால் முன்பு வந்த படங்களை போல இல்லாம் நடனம் சரியில்லை பாடும் காப்பி செய்யப்பட்டது என்று ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்மறை கருத்துக்களே எழுந்து வருகிறது. மேலும் இந்த பாடலில் நடித்திருந்த ராஷ்மிக மந்தனாவையும் “கரகாட்டக்காரன்” திரைப்படத்தில் வரும் கோவை சரளாவை ஒப்பிட்டு கலைத்திருந்தனர்.
மேலும் விஜய் நடித்திருந்த முந்திய படமான இயங்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான “பிஸ்ட்” மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை மேலும் வசூலிலும் குறைவாகத்தான் பெற்றிருந்தது.இந்நிலையில்தான் தற்போது விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமானது பல எதிரிபார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பொங்களை முன்னிட்டு 2023ல் ஜனவரி 12ல் வெளியாகயிகிறது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த ஆண்டு தளபதி 67 நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இப்படியிருக்கும் போதுதான் “வாரிசு” படப்பிடிப்பின் போது செட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்பங்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில் அதில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதாவது அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி இருக்கிறார்கள் இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் தளபதி படிக்கும் ஸ்கிரிப்ட் பேப்பர் தான் . அதனை நாம் சிறிது உற்றுநோக்கி கவனித்தால் ஸ்கிரிப்ட் தமிழில் எழுதப்பட்டுள்ளது தெரிகிறது. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் தமிழில் இருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் வியந்து உள்ளனர். மேலும், படத்தின் Sciprt வெளியில் தெரியும்படியா இவ்ளோ அலட்சியமாக இருப்பது என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.