காப்பி அடிப்பதில் அட்லீயையே மிஞ்சியுள்ள வேட்டைக்காரன் பட இயக்குனர் – இந்த காட்சி ஞாபகம் இருக்கா பாருங்க.

0
5292
vettaikaran

சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களில் வரும் காட்சிகள் வேறு ஏதோ ஒரு படத்தில் சுடப்பட்ட காட்சியாக இருந்துள்ளதை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதில் தற்போதைய முன்னோடி யார் என்றால் இயக்குனர் அட்லீ தான். இதனால் தான் இவருக்கு காப்பி கேட் என்ற பெயரும் இருக்கிறது. அட்லீ இயக்கிய ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியான ‘பிகில்’ திரைப்படம் வரை அட்லீ படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வேறு ஒரு படத்தில் இருந்து சுடப்பட்ட காட்சிகள் தான் என்பதற்கு பல ஆதாரங்கள் நெட்டிசன்களிடம் உள்ளது. அதிலும், பிகில் திரைப்படத்தில் அட்லீ பல காட்சிகளை ஹாலிவுட் படத்தில் இருந்து தான் சுட்டு இருந்தார்.

என்னதான் அட்லீயை காப்பி கேட் என்று பலர் கேலி செய்தாலும், அட்லீக்கு முன்பாக பல இயக்குனர்கள் கூட தங்களது பட படத்தில் ஹாலிவுட்டில் இருந்து சில காட்சிகளை சொருகி உள்ளார்கள். அந்த வகையில் ஹாலிவுட் படத்தில் இருந்து காட்சியை சுட்டதில் அட்லீக்கு முன்னோடியாக இருந்துள்ளார் விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர். தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது இந்த படத்தை பாபு சிவன் என்பவர் இயக்கியிருந்தார்.

- Advertisement -

இவர் விஜயின் குருவி மற்றும் பைரவா படத்திற்கு எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதற்காக கல்லூரியில் சேருவார் அப்படி விஜய் கல்லூரி சேர்ந்து முதல்நாள் வகுப்பு ஆரம்பிக்கும் போது கல்லூரிக்கு அருகில் சிலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள் இதனால் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டிருக்கும் இந்த சட்டத்தினால் வகுப்பில் இருக்கும் ஆசிரியை கொஞ்சம் எரிச்சல் அடைவார். பின்னர் வகுப்பில் இருக்கும் அனைத்து ஜன்னல்களையும் சாத்தி விடுவார்.

அப்போது நடிகர் விலை திடீரென்று எழுந்து அனைத்து ஜன்னல்களையும் அதன் பின்னர் வகுப்பறைக்கு கீழே வேலை செய்து கொண்டிருக்கும் நபர்களிடம் இங்கே முதல்நாள் வகுப்பு நடக்கிறது. அதனால் உங்கள் வேலையை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று அன்பாக வேண்டுகோள் விடுப்பார். இதனால் அவர்களும் சம்மதித்து வேலை செய்யாமல் சென்று விடுவார்கள். அதன் பின்னர் ஆசிரியருக்கே கிளாஸ் எடுப்பர் விஜய். இந்த காட்சியை இயக்குனர் ஏதோ மூளையை கசக்கி பிழிந்து வைத்தார் என்று எண்ணிவிடாதீர்கள். இந்த காட்சி கடந்த 2001 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘The Beautifull Mind’ என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை போன்றே இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement