மங்காத்தா படத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ள விஜய், அதுவும் எந்த ரோலில் பாருங்க – வெங்கட் பிரபு சொன்ன சுவாரசிய தகவல்.

0
358
- Advertisement -

அஜித்தின் மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக இருந்ததை இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் பலர் உள்ளார்கள். அதே போல பல்வேறு நடிகர்கள் இயக்குனராகவும் மாறி இருக்கிறார்கள் அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபுவும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த இவர் “சென்னை 28” மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

மங்காத்தா படம் பற்றிய தகவல்:

அந்த வகையில் இவர் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று மங்காத்தா. இந்த படத்தை தயாநிதி அழகிரி, விவேக் இரத்தினவேல் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உட்படப் பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இன்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மங்காத்தா படத்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.

வெங்கட் பிரபு அளித்த பேட்டி:

மேலும், அஜித் நடிப்பில் வெளியான 50வது படம் மங்காத்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் மங்காத்தா கொண்டு சென்ற அளவிற்கு வேறு எந்த படமும் அவரை தூக்கி வைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மங்காத்தா படம் குறித்தும் விஜய் குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, மங்காத்தா படம் வெளியானவுடன் எங்கள் குழுவினருக்கு விஜய் சார் வீட்டில் விருந்து அளித்தார்.

-விளம்பரம்-

விஜய் பற்றி வெங்கட் பிரபு சொன்னது:

அனைவருமே விஜய், அஜித் இருவருமே போட்டியாளர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. அஜித்தின் 50வது படம் வெற்றி பெற்றதற்கு விஜய் சார் எங்களுக்கு விருந்தளித்தார். பின் விஜய் சார், இப்படி ஒரு படம் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ அர்ஜுன் சார் கதாபாத்திரத்துக்கு என்னை கூப்பிட்டு இருந்தால் கூட நான் நடித்து இருப்பேன். அஜித்தின் 50வது படம் கண்டிப்பாக லேண்ட்மார்க் படமாக இருந்திருக்கும் என்று சொன்னார். அதற்கு நான், இப்போது சொல்கிறீர்களே என்றேன். இல்லை நீங்கள் கேட்டிருக்கலாம் என்று விஜய் சார் சொன்னார். இதை தற்போது வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அஜித்-விஜய் நட்பு:

வெங்கட் பிரபு அளித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெங்கட்பிரபு சொன்ன மாதிரி மங்காத்தா படத்தில் விஜய் நடித்து இருந்தார் வேற லெவல்ல இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால் அஜித்-விஜய் இருவரும் நல்ல நண்பர்கள்தான். இதை ரசிகர்கள் தான் தேவையில்லாமல் சர்ச்சை ஆக்குகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வை படத்தில் நடத்தி இருந்தார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. மீண்டும் இவர்கள் இருவரும் சேர்வார்களா? என்று ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement