ஆர்வக்கோளார்ல இப்படி பண்ண கடும் நடவடிக்கை – ரசிகர்களுக்கு விஜய் வார்னிங்.

0
708
vijay
- Advertisement -

தற்போது தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் தான். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. மேலும், விஜய் பற்றி ஏதாவது சிறு விஷயம் தகவல் கிடைத்தால் போதும் சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் வேற லெவல் டிரன்டிங் ஆக்கிவிடுவார்கள்.

-விளம்பரம்-
Image

அந்த வகையில் தற்போது விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அது என்னவென்றால், மறைந்த முதலமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016ஆம் ஆண்டு விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும், 2021 ஆம் ஆண்டில் உள்ளாட்சி, 2026 இல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் பல வசனங்களுடன் ரசிகர்கள் போஸ்ட் போட்டு இருந்தன. தற்போது இந்த போஸ்டுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, சமீப காலமாகவே விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக விஜய்யை பிற தலைவர்களுடன் இணைத்தும், அர்த்தமற்ற வசனங்களை போட்டும் தேவையில்லாத வேலைகளை செய்துள்ளார்கள். அதோடு அவசியமற்ற பல வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்கள். இது போன்று வெளி வருவது வழக்கம் தான். ஆனால், ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினர் செய்யும் இச்செயல்களை அவ்வபோது விஜய் அனுமதியோடு கண்டித்து உள்ளேன். இயக்கத் தோழர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தி இருப்பினும் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.

Image

இது போன்ற செயல்களை விஜய் எப்போதும் விரும்பியதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில் விஜய்யின் அனுமதி பெற்று இயக்க ரீதியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய்யின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement