விஜய் நல்ல படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் – கமல் கருத்து

0
1110
kamal

தமிழ்த்திரையுலகில் எல்லா காலகட்டத்திலும் இரு நடிகர்களுக்கிடையே போட்டி நிலவுவது வாடிக்கையாகி விட்டது.

எம்.ஜி.ஆர்–சிவாஜி
ரஜினி–கமல்
விஜய்–அஜீத்
சிம்பு–தனுஷ் என்று இந்த பட்டியல் கொஞ்சம் பெருசு தான்.

இதில் இப்போது நாம் பார்க்கப்போவது ரஜினி–கமல் பற்றி தான். ரஜினி “என்வழி தனி வழி” என்பதற்கேற்ப ஆன்மீகம்,கடவுள் பக்தி என்று தனியான ஒரு பாதையில் பயணிப்பவர்.

கமலோ “கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதி மற்றும் மதங்களையும் சாதிகளையும் ஒழித்திட வேண்டுமென்று” குரல் கொடுப்பவர்.
இருவரும் நேரெதிர் திசைகளில் பயணித்தாலும் அவர்களை இவ்வளவு காலமும் இணைத்தது சினிமாவே.

Ilayathalapathy-Vijay

இந்நிலையில் தற்போது தமிழக அரசியல் களத்தில் இறங்க இருவருமே முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இருவரும் எப்போது வேண்டுமானாலும் அரசியல்கட்சி தொடங்கும் நிலையில் தான் தற்போது உள்ளனர்.

கமல் நேற்று இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய விவரங்கள் வெளிவந்தன.

“நீங்க 100 நாட்களில் கட்சி துவங்கப்போவதாக சொன்னீங்களே” நான் அப்படி சொல்லலை அத திருத்தி வெளியிட்டுட்டாங்க” என்று கூறினார்.

ரஜினியிடம் என் அரசியல் பயண துவக்கத்தை தெரிவித்தேன் அவர் மறுப்பு கூறவில்லை, எப்ப வறீங்க என்றுதான் கேட்டார். அவருக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில் இருவரும் இணைந்து செயலாற்றுவோம் என்று தெரிவித்தார்.

Image result for vijay

இதே போல மற்றொரு பேட்டியில் கமல்ஹாசனிடம், விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்க, அதற்கு அவர் எல்லா வெற்றிபெற்ற நடிகர்களும் ஒரு நல்ல சினிமா செய்ய வேண்டும் என்பது ஆசை.

அதை நடிகர் அமீர்கான் போன்றோர் செய்து வருகின்றனர், தம்பி விஜய்யும் அப்படி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என கூறியுள்ளார்.