விஜய்யே அதை ஒத்துக்கொள்ள மாட்டார். மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேட்டி.

0
1814
master
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31000 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே உள்ளது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிப்பதினால் திரையரங்குகள் திறப்பதற்க்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் திரையரங்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து தயாரிப்பாளர்களும் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பது, கடந்த பத்து வருடங்களாக ஆயிரக்கணக்கான படங்கள் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கு. இது பற்றி எந்த ஒரு திரையரங்க உரிமையாளர்களாவது கவலைப்பட்டார்களா?

ஆனால், தற்போது இந்த இரண்டு மாதமாக படம் வெளியாகவில்லை என்றவுடன் மிகவும் கவலைப் படுகிறார்கள். எங்களுக்கு எந்த வழி கிடைக்கிறதோ அந்த வழியை தான் நாங்கள் செய்வோம். நாங்கள் எங்கள் முதலீட்டைகாப்பாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் கிடைக்கப்பெற்ற முதலீட்டைக் கொண்டு தான் திரும்ப படம் எடுக்க முடியும். எங்கள் வசதி, வாய்ப்பு போல தான் நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.

-விளம்பரம்-

எங்களை யாரும் கட்டாயப் படுத்தவோ, பயமுறுத்தவோ கூடாது. எங்களுடைய படம் வெளியிடுவதில் எங்களுக்கு உரிமை உண்டு. மேலும், பெரிய பெரிய நடிகர்களின் படத்தை கூட ஓடிடி தளத்தில் வாங்க முடிவெடுப்பதாக தெரியவந்துள்ளது. மாஸ்டர் படம் குறித்தும் பேசப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால், விஜய் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது தான் என்னுடைய கருத்து. எப்போதும் அவர் தியேட்டரில் படம் வெளியிடுவது தான் விரும்புவார்.

விஜய் படத்தை தியேட்டர் அளவுக்கு விலை கொடுத்து வாங்குவார்கள். தற்போது ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படத்தை நல்ல விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். அதேபோல் ஹிந்தியில் சல்மான்கான் படத்தை 520 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். அதேபோல் மாஸ்டர் படத்தையும் பெரிய விலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அப்போ மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.

Jyothika's movie ponmagal vanthal will be released on Amazon Prime ...

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் படம் கூடிய விரைவில் ott தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜே.ஜே.பிரடரிக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் ரிலீசானால் இது தான் லாக் டவுனில் வெளியான முதல் தமிழ் படம். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ படம் தான். இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement