அப்பா…’னு கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு.! சந்திரசேகர்.!

0
780
vijay

இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய்யின் தங்கையின் சில அறிய புண்ணகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் தனது தங்கையின் இழப்பு விஜய்யை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்று விஜய் தந்தை சந்திரசேகர் கூறியதை பார்க்கலாம்.

அவருக்கு தங்கச்சி வித்யாதான் உலகம். அவளோட தினம் ஒரு வெளையாட்டு வெளையாடுவார். ஒரு கூடையில்  வித்யாவை வைச்சுட்டு தலைக்குமேல் தூக்கிட்டு தலையைச்சுத்தி விளையாடுவார்.  இது ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல… பல நாள் தொடர்கதையா நடந்து வந்துச்சு. ஒருநாள் தலையைச் சுத்தும்போது கைதவறி வித்யா தலை குப்புற விழுந்து விட்டாள் அவ்வளவுதான் ‘அம்மா…’னு விஜய் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்ல இருந்தவங்கள்லாம் ஓடிவந்துட்டாங்க.

- Advertisement -

பயந்துட்டே வித்யாவை தூக்கினோம். ஆனா, ஆச்சர்யம் அவ உடம்புல ஒரு சின்ன கீறல்கூட இல்லை.  இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கும்.  வீட்டுக்குவந்த எல்லோரும் ‘வித்யாவுக்கு ஆயுசு கெட்டி’னு நெகிழ்ந்து வாழ்த்திட்டுப் போனாங்க. ஆனா,  அந்த வாழ்த்து கொஞ்ச நாள் கூட நிலைக்கல.

வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம ‘அப்பா…’னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு. எங்க குடும்பத்துல ஈடு செய்ய முடியாத இழப்பு… வித்யா!” கண்களும் குரலும் ஒருசேர கலங்குகிறது சந்திரசேகருக்கு!

-விளம்பரம்-
Advertisement