தென்னிந்திய சினிமா திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். தளபதி விஜய் அவர்களின் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “யூத்” படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘சந்தியா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஒருவர் நடித்து இருந்தார். அந்த நடிகை யார்? தற்போது அவர் என்ன செய்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.யூத் படத்தின் கதாநாயகியின் உண்மையான பெயர் சாஹீன் கான்.
இவர் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் இவர்களுடைய குடும்பம் தமிழை சேர்ந்தவர்கள். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சூப்பராக பேசி பட்டையை கிளப்புவார். மேலும்,நடிகை சாஹீன் கான் தன்னுடைய பள்ளிப் படிப்பை படிக்கும்போதே மாடலிங் செய்து வந்தார். பின்னர் ‘ஃபேரன் லவ்லி’ என்ற மிகப் பிரபலமான விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானர்.
அதுமட்டுமில்லாமல் இந்த விளம்பரத்தின் மூலம் அவருக்கு சினிமாத் துறையில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது என்று சொல்லலாம். மேலும், நடிகை சாஹீன் கான் முதன்முதலாக தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நவ் தவலு’ என்ற படத்தில் நடித்தார்.2002 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக யூத் படத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த ஒரு படத்திலேயே தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதற்கு பிறகு அவர் தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் சாஹீன் கான் நல்ல கதாபாத்திரம் வேண்டும் என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்.
அதற்கு பின்னர் தமிழில் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. பின் நடிகை சாஹீன் கான் மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து விட்டார். பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியருக்கு ஆலம் கான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது எந்த ஒரு மொழி படங்களிலும் நடிக்காமல் நடிகை சாஹீன் கான் ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்று இருக்குறார். அதுமட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.