கடந்த வாரம் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.

மேலும், விஜயகாந்த் இறப்பிற்கு அவர் உடன் பிறந்தவர்கள் கதறி கதறி அழுது இருக்கிறார்கள். பின் அவர்கள் பேட்டியில், விஜயகாந்த் இறப்பை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குணமாகி விடுவார் என்று நினைத்தோம். அவர் உயிரோடு இருக்கும் போது எங்களுக்கு நிறைய நல்லது செய்து இருக்கிறார். அவருடைய இழப்பை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு சிறு வயதிலிருந்து சினிமாவின் மீது அதிக ஆசை இருந்ததால் சென்னைக்கு வந்துவிட்டார். ஏழை மக்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டு பல உதவிகளை செய்திருக்கிறார்.

Advertisement

விஜயகாந்த் குடும்பம்:

அவருக்கு இந்த பண்பு சிறு வயதில் இருந்தே வந்தது என்று அவருடைய சகோதரர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த்தை விமர்சித்து அவருடைய சகோதரர் பால்ராஜ் 2014 ஆம் ஆண்டு பேட்டியளித்து இருந்தார். அதில் அவர், என்னுடைய அப்பா கே என் அழகர்சாமிக்கு ஆண்டாள், ருக்மணி என்று இரண்டு மனைவிகள் இருந்தார்கள். முதல் மனைவிக்கு விஜயலட்சுமி, நாகராஜன், விஜயராஜ் என்கிற விஜயகாந்த், திருமலா தேவி என்று நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டாவது மனைவிக்கு செல்வராஜ், பால்ராஜ் என்கிற நான், சித்ராதேவி, ராம்ராஜ், மீனா குமாரி, சாந்தி, பிரிதிவிராஜ் என்று ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள்.

பால்ராஜ் அளித்த பேட்டி:

ஆண்டாள் அம்மா இறந்த பிறகு ருக்மணி அம்மாள் தான் எல்லோரையும் பார்த்துக் கொண்டார்கள். அப்பா ரைஸ் மில் கவனித்துக் கொண்டார். விஜயகாந்த் அங்கே தான் இருப்பார். என்னை அவர் எப்போதும் அடித்து கொண்டே இருப்பார். இதனாலே விஜயகாந்தை பார்த்து எனக்கு ஐந்து வயதில் இருந்தே பயம் வந்தது. விஜயகாந்த் என்கூட சரியா கூட பேச மாட்டார். இவர் சினிமாவில் நடிக்க சென்னை வந்துட்டார். அப்பா இறந்த பிறகு என்னை மில்லை விட்டு துரத்தி விட்டாங்க. எலக்ட்ரிஷன் வேலை தெரிஞ்சதால் ஊர் ஊரா போய் பிழைப்பை நடத்த ஆரம்பித்தேன். அப்ப தான் என்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும் யாரும் இல்லை. எனக்கும் உதவி செய்ய ஒருத்தரும் வரவில்லை.

Advertisement

விஜயகாந்த் குறித்து சொன்னது:

ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ரொம்ப கஷ்டம். அதனால் எனக்கு பங்கு பிரித்துக் கொடுத்த வீட்டோட கீழ் பகுதியை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுட்டு மேலே இருக்கிற அறையில் குருவிக்கூடு போல குடும்பம் நடத்தி வந்தேன். மகனை கல்லூரி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விஜயகாந்த் இடம் உதவி கேட்க நினைத்து வீடு, ஆபீஸில் எங்கேயும் அவரைப் பார்த்து பேச முடியவில்லை. போன் பண்ணினாலும் கட் பண்ணி விடுவார். அவர் நல்லவரோ, கெட்டவரோ ஆனால் பிரேமலதா வந்து ஆளையே மாத்தி விட்டார். இப்ப கூட தன்னுடைய மனைவி மைத்துடன் பேச்சை கேட்டுக் கொண்டு தான் இவர் இப்படி எல்லாம் செய்கிறார். எனக்கு மட்டும் இல்ல குடும்பத்தில் யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை.

Advertisement

வடிவேலு குறித்து சொன்னது:

இப்படி அண்ணன் தம்பிக்கு எதுவும் செய்யாதவர் நாட்டுக்கு என்ன செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும் சகலைக்காகவும் தான் அவர் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்கிறார் என்றெல்லாம் பேப்பரில் வருகிறது. அவரோட சொந்த தம்பி தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவர்கிட்ட உதவி கேட்டு அலைந்து திரிந்து ஓய்ந்து போய்விட்டோம். சாகப்போற காலத்தில் இனி அவரே வந்து உதவி பண்ண நினைத்தாலும் அது எங்களுக்கு வேண்டாம்.

அதேபோல் நான் கஷ்டப்படுவதை பார்த்து என்னுடைய நண்பர் அதிமுகவில் இணைத்தார். அதோடு மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேல் விஜயகாந்த் விடை எவ்வளவோ ஏழையாக இருந்து அவர் சினிமாவுக்கு போய் சம்பாதித்த பிறகு தன்னோட குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டார். அதோடு விடாமல் கஷ்டத்தில் இருக்கிற தன்னோட சொந்தக்காரர்கள் எல்லாத்தையும் தேடித் தேடிப் போய் ஏதாவது ஒரு உதவி செய்து அவர்களுக்கு வாழ்க்கை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் மனுஷன் என்று கூறியிருந்தார்.

Advertisement