நேற்று முதல் சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில வாரமாகவே விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது. நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலமானார் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும்,நேரிலும் விஜயகாந்தின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

வடிவேலு-கேப்டன் சண்டை:

ஆனால், வடிவேலு மட்டும் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தொடர்பாக அவர் பதிவும் போடவில்லை. இது குறித்து நெட்டிசன்கள்விமர்சித்து வருகிறார்கள். காரணம், பத்தாண்டுகளுக்கு முன்பு தேர்தலின் போது வடிவேலு திமுக கட்சியில் இணைந்து கொண்டு விஜயகாந்தை மிக மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். இருவரும் சேர்ந்து படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலு மிக மோசமாக விஜயகாந்தை பேசி இருந்தார்.

பிரேமலதா பேட்டி:

அப்போதிலிருந்தே இரு தரப்பிற்கு மத்தியில் சண்டை சச்சரவுகள் இருந்தது. மேலும், இது தொடர்பாக கூட சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரேமலதா, ‘இதுவரை கேப்டன் தன்னை திட்டியவர்களையோ, தனக்கு துரோகம் செய்தவர்கள் பற்றியோ தவறாக பேசியதே கிடையாது. அவரை எத்தனை வீடியோக்கள் மீம்ஸ் போட்டு போட்டு கேலி செய்தார்கள். ஆனால், இது நாள் வரை அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது. அவ்வளவு வார்த்தை பேசிய வடிவேலுவை பற்றி கூட என்னிடம், ‘வடிவேலு ஏன் இப்போது நடிக்க மாட்டேங்கிறார்.

Advertisement

வடிவேலு குறித்து கேப்டன் சொன்னது:

அவர் எல்லாம் பிறவிக் கலைஞன். அவர் நடிக்க வேண்டும் அவருக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று என்னிடமே கூறியிருந்தார். அவருக்குத் தெரிந்த பல தயாரிப்பாளர்களிடம் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் மறைவிற்கு வடிவேலு வராததை பலருமே திட்டி வருகிறார்கள். இந்த நிலையிலும் கூட வடிவேலு வன்மத்துடன் நடந்து இருக்கிறார். இது ரொம்ப தவறான செயல் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

Advertisement

நெட்டிசன்கள் விமர்சனம்:

அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே போண்டாமணி இறப்பிற்கு கூட வடிவேலு செல்லவில்லை. தன்னுடன் நடித்த சக நடிகர்களின் இறப்பிற்கு கூட வடிவேலு செல்வதே இல்லை. எல்லோரையும் துச்சமாக நினைத்து வரும் வடிவேலுவின் இறப்பிற்கு யார் வருவார்கள்? இப்படி எல்லாம் செய்தால் இவருடைய கடைசி காலத்தில் கூட யாரும் வந்து நிற்க மாட்டார்கள்? என்றெல்லாம் விமர்சித்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement