உடல் நிலை முன்னேறி வந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக – கேப்டன் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிக்கை.

0
250
- Advertisement -

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டு இருக்கும் அறிக்கை ரசிகர்களையும் தொண்டர்களயும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்திற்கு மூன்றாம் நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

80 தொடங்கி 2k வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்த் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார். தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார்.இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கமே கடனில் மூழ்கியிருந்தபோது கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து பல உதவிகளை செய்திருக்கிறார்.

இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது தொடர் சிகிச்சை எல்லோரும் விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று வருகிறார் அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியா மருத்துவமனையில் விஜயகாந்த்திற்கு கடந்த சில நாட்களாக நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

விஜயகாந்த் சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ‘விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Advertisement