தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார்.
தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “ஜகமே தந்திரம்”. தற்போது கொரோனா வைரஸ் காரணத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டுள்ள நிலையில் அணைத்து நடிகர்களும் வீட்டில் தான் இருந்து வருகிறார்கள் இந்த நிலையில் ஒரு சில மாதத்திற்கு முன்னர் தனுஷின் சகோதரி தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவைபகிர்ந்திருந்தார்.
நடிகர் தனுஷ்க்கு, இயக்குனர் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். அதில் மகப்பேறு மருத்துவராக இருந்து வருபவர் தான் கார்த்திகா. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் இறுகின்றனர். ஆனால், கார்த்திகாவிற்கு மருத்துவ சீட்டு வாங்கி கொடுத்தது வேறு யாரும் இல்லை நம்ம கேப்டன் விஜயகாந்த் தான்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, என் மகளுக்கு டாக்டர் சீட் வாங்க வேண்டும் என்று விஜயகாந்திடம் சொன்னேன். மேலும், என்னால் 10 லட்சம் தான் ரெடி செய்ய முடியும் என்று சொன்னேன். அதற்கு அவர் நீங்க எல்லாம் எதுக்கு புள்ள பெத்தீங்க, ஒரு 20 ரூபாய் குடுங்க என்று சொன்னார். பின்னர் உடையார் வந்து 17 ரூபாய் குடுங்க என்றார். அதன் பின்னர் எப்படி தனது மகளுக்கு சீட்டு வாங்கினார் என்பதை நீங்களே பாருங்களேன்.