-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

கோவில் போல கட்டப்பட்ட கேப்டனின் நினைவிடம் – கலங்க வைக்கும் புகைப்படம் இதோ.

0
1162

கோயில் போல் காட்சி அளிக்கும் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் என்றென்றும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சி கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

ஏழை, உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர். இப்படி பல உதவிகளை செய்த இவர் தேமுதிக என்ற கட்சியை துவங்கி அரசியலில் குதித்தார். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார்.

விஜயகாந்த் உடல்நிலை:

அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு சளி சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து இருந்தார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்த் மறைவு:

-விளம்பரம்-

இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீட்டுக்கு திருப்பினார். பிறகு மீண்டும் நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

பிரபலங்கள் இரங்கல்:

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த் நினைவிடம்:

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடம் பார்ப்பதற்கு கோயில் போல் இருக்கிறது. கோயில் போல அவருடைய நினைவிடத்தை அழகாக கட்டிருக்கிறார்கள். பார்ப்பதற்கே பிரமிக்க வைக்கும் அளவிற்கு விஜயகாந்த் உடைய நினைவிடம் இருக்கிறது. தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news