பச்சை சட்டை, சாதாரண வேஷ்டி – குடும்பத்துடன் சிம்பிளாக பொங்கல் கொண்டாடிய கேப்டன்.

0
1047
vijayakanth
- Advertisement -

விஜயகாந்த் வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

- Advertisement -

கேப்டனின் கட்சி :

இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து வருகிறார். விஜய பிரபாகரன் தன் தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார்.

உடல் நிலை குறைவு :

சமீபகாலமாக விஜயகாந்துக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதோடு உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த் அவர்கள் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

வீல் சேரில் கேப்டன் :

தற்போது தொடர் சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த் கட்சிக் கூட்டங்களிலோ பொது நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வது கிடையாது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர்கர்ளை சந்திப்பதற்காக விஜயகாந்த் வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். எழுந்து நடக்க முடியாத அவரை 5 பேர் அழைத்து வந்தனர். அப்போது தொண்டர்களை பார்த்து அவரால் கையை கூட அசைக்க முடியவில்லை.

பொங்கல் கொண்டாட்டம் :

பின்னர் அவரின் மகன் அவரது கையை தூக்கிவிட, அப்படியே தொண்டர்களை பார்த்து கும்பிட்டு கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் வீல் சேரில் இருந்து விழப் பார்த்த அவரை தாங்கி பிடித்தனர். கேப்டனின் இந்த நிலையை பார்த்து தொண்டர்கள் பலர் கண்ணீர் வடித்தனர். இப்படி ஒரு நிலையில் கேப்டன் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதில் பச்சை சட்டை சாதாரண வேட்டி அணிந்து கெத்தாக அமர்ந்து இருக்கிறார்.

Advertisement