விஜய் கோட் படத்தில் விஜயகாந்தா? இத்தனை நிமிடம் வருகிறார்- வெளியான அதிரடி அப்டேட்

0
129
- Advertisement -

விஜய்யின் கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், கௌதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் கோட் படம்:

இந்த நிலையில் விஜயின் கோட் படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் நடிகை திரிஷா, சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மறைந்த நடிகர் விஜயகாந்த்தும் வருகிறார். விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் ஒன்றரை நிமிடங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் குறித்த தகவல் :

இதனால் விஜயகாந்த்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட இருப்பதால் கோட் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு விஜய்யின் 50வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள், நிர்வாகிகள் பல ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த கோட் படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது வெளிநாட்டில் கோட் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோட் படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வெளியாகி இருந்தது.

விஜய் கடைசி படம்:

கோட் படத்தினுடைய மொத்த படபிடிப்பு முடிந்த பிறகு தான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு டீ-ஏஜிங் டெக்னாலஜிக்கான வேலைக்கு அனுப்பப்படுகிறது. சமீபத்தில் பிரேம்ஜி திருமணம் நடந்ததால் வெங்கட் பிரபு பிரேக் எடுத்து இருந்தார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது தான் அவரின் கடைசி படம். அதற்கு பின் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

Advertisement