தேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.

0
1189
vijayaprakaran

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சகாப்தம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார்.

இதையும் பாருங்க : தன் மகனுக்கு தந்தை நினைவாக பெயர் வைத்துள்ள சிவகார்த்திகேயன் – அவரே பதிவிட்ட குயூட் புகைப்படம்.

- Advertisement -

விஜயகாந்தின் மற்றொரு மகனான விஜய பிரபாகரன் தற்போது தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்துக்கு பின்னர் இவர் தான் அந்த கட்சியை வழி நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தே மு தி க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 2,00,156 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. தேர்தல் நடக்கும் முன்னர் வெள்ளை உடையில் தனது கட்சிக்காக அக்மார்க் அரசியல்வாதியாக பறந்து பறந்து பிரச்சாரம் செய்த விஜயப்ரபாகரன், தற்போது தேர்தல் முடிந்ததும் படு ஸ்டைலாக வேற லெவல் லுக்கிற்கு மாறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement