கடைசி வரை நிறைவேறாத ஆசை – 10 ஆண்டுகளாக விஜயகாந்த் கட்டி வந்த வீடு கடைசி வரை கட்டி முடிக்க முடியாத காரணம்.

0
616
- Advertisement -

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

-விளம்பரம்-

பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில்டிசம்பர் 28 ஆம் தேதி காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துஇருந்தனர்.

- Advertisement -

கேப்டனின் இறப்பு :

விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்த் அவர்கள் புதிதாக பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டி வருகிறார்.

கேப்டன் கட்டிவந்த வீடு :

இதில் தான் விஜயகாந்த் குடிபெயரப்போவதாகவும் கூறியிருந்தார். காரணம், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கு வசதி இல்லை. இதனால் தான் விஜயகாந்த் அவர்கள் காட்டுப்பாக்கத்தில் சுமார் 20000 சதுர அடியில் புதிதாக விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வந்தார். 2013 ஆம் ஆண்டு இந்த புது வீடு கட்டும் பணி தொடங்கியது. இடையில் சில பிரச்சினைகளால் நின்றது.

-விளம்பரம்-

வீட்டின் நிலை :

பின் பத்தாண்டுகளாக இந்த வீட்டினுடைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது 90% இந்த புது வீட்டின் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குள் விஜயகாந்த் இறந்திருப்பது பலருக்குமே சோகத்தை ஏற்படுத்திருக்கிறது. மேலும், சில வருடங்களுக்கு முன் இந்த வீட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அப்பாராவ் என்பவர் தன்னுடைய மனைவியுடன் அங்கேயே தங்கி பாதுகாத்து வந்திருக்கிறார்.

2013ல் இந்த வீடு கட்ட ஆரம்பித்தும் இந்த கிட்டதட்ட 10 ஆண்டுகளாக இந்த வீட்டின் பணிகள் முடிக்க முடியாமல் போன காரணம், கேப்டனுக்கு ஜோதிடத்தில் இருந்த நம்பிக்கை தான். அந்த வீட்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சொன்னதால் கேப்டன் இந்த வீட்டை கட்டும் வேகத்தை குறைத்துள்ளார். பின்னர் தான் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதற்கிடையில் இந்த வீடு

Advertisement