விஜயகாந்த் நூறு முறைக்கு மேல் பார்த்த பிரபல நடிகரின் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் விஜயகாந்தின் இறப்பு செய்தி புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவு:
பின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் விஜயகாந்த் 100 முறைக்கு மேல் பார்த்த படம் குறித்த தகவல் தான் தற்போது வைரல் ஆகிறது.
விஜயகாந்த் பேட்டி:
விஜயகாந்த் மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகர். இவர் எம்ஜிஆர் படங்களை பார்த்து வளர்ந்தவர் என்றே சொல்லலாம். அதனால்தான் இவருக்கு நடிப்பின் மீதும் ஆசை வந்தது. பின் ரஜினியின் நடிப்பை பார்த்தும் சினிமாவில் நடிக்கலாம் என்று இவர் சென்னைக்கு வந்தாராம். மேலும், பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் விஜயகாந்த் எம்ஜிஆர் குறித்து கூறியிருந்தது, என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் எங்கள் வீட்டுப்பிள்ளை படம் ஓடி இருந்தது.
எம்ஜிஆர் குறித்து சொன்னது:
அந்த படத்தில் வரும் சண்டை காட்சிக்காகவே நான் அந்த படத்தை 120 முறை பார்த்தேன். அதற்குப் பிறகு எம்ஜிஆர் நடித்த அரசிளங்குமாறி, நாடோடி மன்னன் போன்ற படங்களில் வரும் சண்டை காட்சிகள் எல்லாம் அதற்குப் பின் வந்த எந்த படங்களிலுமே இல்லை. அப்படி இருக்கும்போது தான் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது. அந்த படத்தை நான் எழுபது முறை பார்த்தேன். நான் எம்ஜிஆர் ரசிகன் இல்லை வெறியன் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் ஆசை:
அதேபோல் விஜயகாந்த் அவர்கள் சென்னையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதில் தான் விஜயகாந்த் குடிபெயரப்போவதாகவும் கூறியிருந்தார். 2013 ஆம் ஆண்டு இந்த புது வீடு கட்டும் பணி தொடங்கியது. இடையில் சில பிரச்சினைகளால் நின்றது. பின் பத்தாண்டுகளாக இந்த வீட்டினுடைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது 90% இந்த புது வீட்டின் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குள் விஜயகாந்த் இறந்திருப்பது நிறைவடைந்து சோகத்தை ஏற்படுத்திருக்கிறது.