மிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்த விஜயலட்சுமியின் தற்போதைய நிலை – புகைப்படம் உள்ளே

0
14815
anjathe

நடிகை விஜயலட்சுமி 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனர். இவருக்கு கார்த்திகா என்ற அக்காவும் நிரஞ்சனி என்ற தங்கையும் உள்ளனர்.

Vijayalakshmi

இவர் தன்னுடைய 17 வயதில் சென்னை-28 படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவருக்கு ஹீரோயினாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு ஆகிய படங்களில் ஹீரோயினாகவும், வனையுத்தம், ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, சென்னை-28 இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் குணச்சித்ர கேரக்டரில் நடித்தார்.

அதன்பின்னர் சுல்தான் என்ற ரஜினி படத்திற்கு ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஜயலட்சுமி. ஆனால், அந்த படம் தள்ளி போக விஜயலட்சுமி அந்த படத்தில் இருந்து பின் வாங்க, பின்னர் இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீண்டும் தாமதம் ஆக, அந்த படம் மொத்தமாக கை விடப்பட்டது. அதற்கு பதில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vijayalakshm2

கடந்த 2015ஆம் ஆண்டு பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார் விஜயலட்சுமி. பேரொஸ் முகமது இயக்குனர் அறிவழகனின் துணை இயக்குனர் ஆவார்.

Vijayalakshmi3

தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் விஜயலட்சுமி. கடந்த ஆண்டு வெளிவந்த பண்டிகை படத்தினை தயாரித்துள்ளார் இவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார் விஜயலட்சுமி.