முதல் முறையாக இந்தியாவிற்கு வந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருந்தார்கள். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக சர்வைவர் போனது என்று சொல்லலாம். முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது.
ஆரம்பம் முதல் இறுதி வரை
பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. கடந்த மூன்று மாதங்களில் எந்த வசதியும் இல்லாத தீவில் தான் போட்டியாளர்கள் தங்கியிருந்தார்கள். உணவு, இருப்பிடம் என எதுவும் இல்லாமல் அவர்கள் நிகழ்ச்சியில் விளையாடி இருந்தனர். அனைவரும் எதிர்பார்த்து இருந்த சர்வைவர் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் தான் முடிவுக்கு வந்தது. இறுதியில் இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை விஜயலட்சுமி தட்டிச் சென்றார்.
சமூகவலைத்தள ஆதரவு
அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் காலில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை காட்டியிருக்கிறார். பின் அவர் கூறி இருப்பது, “Nothing worth having comes easy” அதாவது எதுவும் ஈசியாக கிடைத்து விடாது என்று கூறி உள்ளார். இதை பார்த்த சில பேர் ஒரு கோடி ரூபாய் பரிசு சும்மா கிடைக்குமா? என்ற கிண்டல் செய்து கமெண்ட் செய்து உள்ளனர்.
சர்வைவர் போட்டியின் வெற்றியாளர்
தற்போது விஜயலக்ஷ்மி பதிவிட்ட புகைப்படமும், பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் விஜயலக்ஷ்மி. பின் சின்னத்திரை சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து இருக்கிறார். தற்போது இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபலமாகி உள்ளார்.
போட்டியின் இறுதியில் மனக்கசப்பு
போட்டியின் இறுதி வாரத்தில் விஜ்யலக்ஷ்மிக்கும் உமாபதி அவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது, இருவரும் ஒரே அணியில் ஆரம்பம் முதல் பயணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உமாபதி அவர்கள் தான் சர்வைவர் போட்டியின் வெற்றியாளராக வருவார் என்று போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.