சில தினங்களாகவே அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருவது என்னவென்றால் சீமான் விஜயலட்சுமி பிரட்சனை தான். விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டுக்கு குறித்து சீமான் அவர்களும் அவ்வபோது பதில் அளித்து வருகிறார். பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார். நடிகை இந்த புகாரின் பேரில் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் ஆறு மணி நேரம் கோயம்பேடு துனை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை செய்தனர்.

Advertisement

விஜயலக்ஷ்மி திரைப்பயணம்:

பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நேற்றைய விசாரணை:

இந்நிலையில் நேற்று திருவள்ளுரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அவரது வாக்குமூலம் வீடியோ பதிவு மற்றும் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மதுரவாயில் போலீஸ் நிலையத்தில் உள்ள துணை கமிஷனர் அறையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாள் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயலட்சுமி முகமலர்ச்சியுடன் வெற்றி குறியுடன் இரண்டு கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்றார்.

Advertisement

செல்லும் வழியில் அவருக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜயலட்சுமி காரில் அழைத்து சென்று வருவது குறிப்பிடத்தக்கது. நீதிபதி முன்பு விஜயலட்சுமி ஆஜராகி சீமான் தன்னிடம் நெருங்கி பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள் புகைப்படங்கள் பணம் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சாட்சியங்களை விஜயலட்சுமி அளித்துள்ளார்.

Advertisement

மேலும் நீதிபதியிடம் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலம் எழுத்து பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ள நிலையில் விஜயலட்சுமி போலீஸ் நிலையத்திலிருந்து முகமலர்ச்சியுடன் வெளியே சென்றதால் எந்த நேரத்திலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சீமான் மீது பெண் வன்கொடுமை, கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

Advertisement