நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராவது தொடர்பாக வீரலட்சுமி சீமானுக்கு நிபந்தனை விதித்ததற்கு நடிக்க விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று கொள்வதாக புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார்.

ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். அது குறித்து சில தினங்களுக்கு மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அதன் பின் விஜயலட்சுமி மகிழ்ச்சியாக வெளியே வந்தார். இந்த வழக்கில் சீமான் ஆஜர் ஆக மறுத்து வந்த நிலையில் தற்போது அவர் வருகின்ற 18ஆம் தேதி நேரில் ஆஜராக ஒப்புக்கொண்டார். அப்போது அவர் வீரலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement

அதற்கு பதிலளித்த வீர லட்சுமி நானும் விஜயலட்சுமியும் ஆஜரகிறோம் ஆனால் சீமான் கயல்விழி மற்றும் தேன்மொழியும் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று வீர லட்சுமி கூறியிருந்தார். வீரலட்சுமியின் கருத்திற்கு விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் அது போன்று ஏதும் கூறவில்லை வீர லட்சுமி என்னிடம் ஆலோசிக்காமல் அது போன்று கூறி வருகிறார். அவர் கூறியதற்கும் எனக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை என்று விளக்கம் வீடியோ வெளியிட்டுள்ளார்.      

விஜயலட்சுமி கூறியது:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராவது தொடர்பாக வீரலட்சுமி சீமானுக்கு நிபந்தனை விதித்ததற்கு நடிக்க விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான்  நேரில் ஆஜர் ஆகுவது பற்றி கூறுகையில் அவர் என்னையும் வீரலட்சுமி நேரில் ஆஜராகும் படி கூறி இருந்தார். அதற்கு வீரலட்சுமி சீமானுக்கு பதில் அளிக்கும் வகையில் அதற்கு நீங்கள் ஆஜராகும் போது உங்கள் கயல் விழியையும் தேன்மொழியும் கூட்டிட்டு வரும்படி அவர் கூறி இருக்கிறார். நான் இது பற்றி வீரலட்சுமி தான் கேட்கிறேன் நீங்கள் அது குறித்து என்னிடம் பேசினீர்களா. நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் சீமானை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறீர்கள்.

Advertisement

அப்போது நான் எதற்கு  நான் இந்த வழக்கில் இருக்கிறேன். நான் பதினெட்டாம் தேதி சீமான் சந்திக்கும் போது அவரிடம் சமரசம் செய்து விட்டு நான் பெங்களூருக்கு சென்று விடட்டுமா. நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது என்னுடைய வழக்கா அல்லது உங்கள் இருவருக்கும் தனிப்பட்ட வழக்கா? இதுவரை நேரில் ஆஜராக மாட்டேன் என்று கூறியிருந்தவர் வரும் 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறி இருக்கிறார். அப்புறம் என்ன இது புதுசாக நீங்கள் கூறி வருகிறீர்கள். நீங்கள் என்ன தேன்மொழி கூட்டிட்டு வாருங்கள் கயல்விழியை கூட்டிட்டு வாருங்கள் என்று உங்கள் இஷ்டத்திற்கு பேசி வருகிறீர்கள்.

Advertisement

நான் இது தொடர்பாக வீரலட்சுமி வன்மையாக கண்டிக்கிறேன். இதை நான் தமிழர் கட்சியில் இருக்கும்  நபர்களிடம் கூறுகிறேன் என்னிடம் ஆலோசிக்காமல் வீரலட்சுமி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் நேரில் சீமானை பார்த்தால் எனக்கு நிறைய ஆதங்கம் இருக்கிறது அதை நான் அவரிடம் கொட்டி விடுவேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் இதுபோன்ற என்னிடம் ஆலோசிக்காமல் நீங்களாகவே அதுபோன்று செய்து வந்தால் நான் பிறகு பெங்களூருக்கு புறப்பட்டு சென்று விடுவேன். என்று வீரலட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement