மோடி வந்து தாலி எடுத்து கொடுக்கனும்னு கல்யாணத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேனா – கேப்டன் மகன் சொன்ன உண்மை.

0
499
vijayaprabhakar
- Advertisement -

நிச்சயதார்த்தம் நடந்து 3 ஆண்டுகள் கழித்தும் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்காத இருப்பதற்கான காரணம் கேப்டன் மகனே கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது.

- Advertisement -

அதோடு இவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சில காலமாக உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். கேப்டனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2019 டிசம்பரில் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய பிரபாகரன் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது, மோடி வந்து தாலி எடுத்து கொடுத்தால் தான் என்னுடைய திருமணம் நடக்கும் என்று காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், இது உண்மையே இல்லை. மேலும், எனக்கு நடந்தது நிச்சயதார்த்தமும் இல்லை. எனக்கு பெண் பார்க்க சென்றபோது நான் கொஞ்சம் ஆடம்பரமாக உடை அணிந்து விட்டு சென்று விட்டேன்.

-விளம்பரம்-

அதை புகைப்படம் எடுத்து எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது போல செய்திகள் வெளியிட தொடங்கி விட்டார்கள். ஒரு நிச்சயதார்த்தம் என்றால் எப்படி இருக்கும் ? எத்தனை பேர் இருப்பார்கள்? அந்த புகைப்படத்தில் என்னுடைய தந்தை கூட இருந்திருக்க மாட்டார். அது நாங்கள் பெண் பார்க்கும் போது எடுத்த புகைப்படம் தான். அப்போது எதார்த்தமாக எடுத்த அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு எனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகளை போட்டு விட்டார்கள்.

அந்தப் பெண்ணை பெண் பார்த்து வந்த பின்னர் நிச்சயதார்த்தம் கூட நடக்கவில்லை. இரண்டு குடும்பத்திற்கும் ஒத்து வராமல் போனதால் அது அப்படியே நின்றுவிட்டது. அந்த பொண்ணுமும் வாழ்க்கை இருக்கு தேவை இல்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம். எனக்கு நிச்சயதார்த்தம் முடியவில்லை திருமணமும் நடக்கவில்லை. நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். மேலும் என்னுடைய திருமணம் காதல் திருமணமா? இல்லை வீட்டில் பார்த்து செய்து இருக்கப் போகிறார்களா என்பது எனக்கே தெரியாது

Advertisement