பீஸ்ட் ஷூடிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹேக்டே. அப்டேட்க்கு இவரே போதும் போலயே.

0
4018
pooja
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி நெல்சன் பிறந்தநாளில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

அதே போல விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி 12 மணிக்கு இரண்டாம் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் ஷெட்டுயூல் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது.

This image has an empty alt attribute; its file name is 1-178-758x1024.jpg

ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதலில் டான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹேக்டே இந்த படத்திற்காக நடன பயிற்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் மூலமாகே படத்தின் அப்டேட்டுகள் அடிஅடிக்கடி கிடைத்து வருகிறது என்பதை எண்ணி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement