விஜய்யின் ‘பீஸ்ட்’க்கு எதிர்ப்பு – இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள. இந்த முறை விடுதலை சிறுத்தை.

0
1810
beast
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) நெல்சன் பிறந்தநாளில் வெளியானது.இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர்.

இதையும் பாருங்க : பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட விபத்து, கொட்டிய ரத்தம், தையல் போடும் அளவு ஏற்பட்ட காயம்.

- Advertisement -

இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார்.  இப்படி ஒரு நிலையில் இந்த தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என நடிகர் விஜய்க்கு, வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை வருவது சாதாரண ஒரு விஷயம் தான் சர்க்கார் படத்தின் போஸ்டர் வெளியான போது கூட நடிகர் விஜய் சிகிரெட் பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அந்த போஸ்டர் இருக்கிறது என்று பல அரசியல் தரப்பினர் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement