ஸ்கோப் பஞ்சாயத்தை தொடர்ந்து தற்போது காப்பி பஞ்சாயத்தில் சிக்கிய பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்.

0
403
beast
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-
Image

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

- Advertisement -

விஜய்யின் ஆறாவது ஆங்கில தலைப்பு :

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார். 

கேலிக்கு உள்ளாகி இருக்கும் புதிய போஸ்டர் :

பொதுவாக உச்ச நட்சத்திரங்களின் படங்களின் அப்டேட்டுகள் வெளியானால் அதனை கேலி செய்வதர்க்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும் அந்த வகையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஷார்ட் கண்ணில் ஸ்கோப் பொறுத்தப்பட்டு இருப்பதை பலர் கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

காலா பட போஸ்டரின் காப்பியா :

ஆனால், அந்த போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் போஸ்டர் போல இருக்கிறது என்று கேலி செய்ய ஆரம்பிக்க துவங்கிவிட்டனர். அதே போல விவேகம் படத்தில் அஜித், பணி பிரதேசத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் இந்த போஸ்டருடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் கதை என்ன :

பீஸ்ட் படத்தின் கதை தங்கக் கடத்தலை மையப்படுத்தியது கூறப்படுகிறது. விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதை பின்னணியாகக் கொண்டு பீஸ்ட் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறவராக ஷைன் டாம் சாக்கோ நடித்திருப்பதாகவும், அவர் பிரதான வில்லன்களில் ஒருவரான செல்வராகவனின் ஆளாக படத்தில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement