நான் அடிச்சா தாங்க மாட்ட, இலங்கையே இல்லாம போயிடும் – தற்போது வைரலாகும் விஜய்யின் பழைய வீடியோ.

0
901
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் இதை சமீபகாலமாகவே இவரது படங்களில் அரசை எதிர்த்து பல்வேறு வசனங்கள் இருந்ததால் இவரது படங்கள் வெளியாகும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிரச்சனை தற்போது ஆரம்பித்தது கிடையாது தலைவா படத்தின் போதே நடிகர் விஜயின் படங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது.

-விளம்பரம்-

தலைவா படத்திற்கு பின்னர்தான் விஜய்யின் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தது சமீபத்தில் வெளியான திகில் படம் வரை இந்த பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை அதிலும் கத்தி படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அதிலும் குறிப்பாக கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனங்கள் பல்வேறு அரசியலை விமர்சித்த இருந்தது.

- Advertisement -

அதே போல விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். மேலும் சமீபகாலமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பல்வேறு அரசியல் பேசியது இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து பேசியபோது, இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த வீடியோ ஒன்றை இலங்கையைச் சேர்ந்த சிலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறார்கள்.

அந்த வீடியோவில் பேசும் விஜய் வேட்டைக்காரன் படத்தில் வரும் நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட என்ற வசனத்தை பேசியதோடு உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு இடமே இல்லாமல் போய்விடும். பக்கத்து வீட்டு காரனாச்சே எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று அடங்கி இருக்கிறோம். எங்கள் பொறுமையை சோதித்து விடாதீர்கள் என்று மிகவும் ஆவேசமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் பதிவிட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement