ஷூட்டிங் முடிச்சிட்டு எவ்வளவோ சோர்வா இருந்தாலும் அத விட மாட்டாரு – விஜய்யின் பிட்னஸ் ரகசியம் சொன்ன சாந்தனு.

0
2976
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து ...

இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் விஜய் குறித்து சுவாரசியமான சில விஷயங்களை சமீபத்தில் நடந்த வீடியோ கால் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, விஜய் அண்ணாவுக்கு எந்த டிரஸ் போட்டாலும் சூப்பராக இருக்கும். எப்போவுமே ஷூட்டிங் 6 மணிக்கு முடிஞ்சா 6 அல்லது 6.30க்கு எல்லாம் டின்னர் முடிச்சிடுவார். உடனே ஹோட்டலுக்கு போயிட்டு மேக்கப் எல்லாம் எடுத்துவிட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் ஒர்க்கவுட் பண்ணுவாரு.

- Advertisement -

விஜய் அண்ணா எவ்வளவு சோர்வாக இருந்தாலும் ஒர்க்கவுட் பண்ணாம இருக்கவே மாட்டார். அது தான் அவர் இந்த இடத்தில் இருப்பதற்கு மற்றும் அவருடைய உடம்பு பிட்னஸ்க்கு காரணம் என்று கூறினார். உலகம் முழுவதும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருடைய படம் என்றாலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement