குண்டாக இருந்ததால் கில்லி படத்தில் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை இழந்த விஜய் பட நடிகை.

0
2057
ghilli
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருந்து வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து தோல்விப்படங்களாக கொடுத்த வந்த விஜய்க்கு எடையில் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகுக்கும் இந்த படம் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், அவர் நடித்த அம்மா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு துளசிக்கு தான் வந்ததாம். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் “சர்கார்” படத்தில் பிரபல நடிகையான துளசி, நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் .

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is tulasi.jpg

நடிகை துளசி 1967 ஆம் தெலுங்கில் வெளியான “பார்யா ” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அத்தோடு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை துளசி நீண்ட இடைவேளைக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான “ஈசன்” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் “பண்ணையாரும் பதமினியும், ஆதாலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு “போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் “சர்கார்” படத்தின் மூலம் முதன் முறையாக நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார் நடிகை துளசி.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை துளசி “சர்கார்” படத்தில் நடித்த அனுபவத்தையும், படம் குறித்தும் பல சுவாரசியமான தகவலை வெளியிட்டிருந்தார், அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் விஜயை முத்த பையனாகவே தான் எப்போதும் நினைப்பேன், என்னுடைய மகனும் விஜயை அண்ணன் என்று தான் அழைப்பான். விஜயை முதன் முதலில் நான் நேரில் பார்த்த போது விஜிமா என்று தான் அழைத்தேன், அது அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது என்று கூறிஇருந்தார் துளசி.

வீடியோவில் 7 : 22 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

மேலும், சர்க்கார் படத்திற்கு முன்னதாகவே நடிகை துளசி விஜய்யின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். ஆம், கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு நடிகை துளசிக்கு தான் வந்துள்ளது. ஆனால், அப்போது மிகவும் குண்டாக இருந்ததால் தனக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போனதாக கூறியுள்ளார். ஆனால், சர்க்கார் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து விட்டேன் என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.

Advertisement