மாஸ்டர் படத்த பாத்துட்டு இந்த பூனையை வாங்க ஆசைபட்ற போறீங்க – இதோட விலை எவ்ளோ தெரியுமா ?

0
7099
master
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நேற்று (ஜனவரி 14) வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் நேற்று இந்த படம் வெளியாகி இருந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கபடுகின்றன

-விளம்பரம்-

இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படித்திருந்தாலும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. மாநகரம், கைதி போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து இருந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் விஜய் ரசிகர்களுக்காக தன்னுடைய கொள்கையை தளர்த்து முழு கமர்சியல் படமாக மாஸ்டர் படத்தை கொடுத்திருக்கிறார். இருப்பினும் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரின் மாஸ் ரசிகர்களுக்கு படித்திருந்தாலும் படத்தின் திரைக்கதை கொஞ்சம் சுதப்பி இருக்கிறது.

- Advertisement -

பல்வேறு விமர்சகர்களும் இந்த படத்திற்கு சுமாரான விமர்சனத்தை தான் அளித்து வருகின்றனர். அதே போல இந்த படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய்க்கேன்றே சில சின்ன சின்ன விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தார் லோகேஷ். அந்த வகையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கார், கையில் காப்பு போன்றவற்றோடு இந்த படத்தில் ஒரு பூனையையும் விஜய் வளர்ப்பார்.

இந்த பூனை படத்தின் சில ஸ்டில்கள் வெளியான போது பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த பூனையுடன் தான் படத்திற்கு செல்வார்கள் என்று மீம்கள் கூட வைரலானாது. இந்த படத்தில் விஜய் வைத்திருந்த அந்த பூனை Persian என்ற ரகத்தை சேர்ந்தது. இந்திய மதிப்பில் ஒரு வளைந்த Persian பூனையின் விலை சுமார் 25,000மாம். அதே போல குட்டி விலை 10,000 முதல் 18,000 ஆயிரம் வரை இந்தியாவில் விற்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement