தீபாவளிக்கு மாஸ்டர் படம் கிடையாது, தயாரிப்பாளர் திட்ட வட்டம். காரணம் இது தான்.

0
294

கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாகஇருந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

master

இதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருக்கின்றனர். மேலும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்த போது கூட ரசிகர்களுக்காக நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட ஆசைபடுகிறார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் மாஸ்டர் படமும் அமேசானில் வெளியாகுமா என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள Amazon நிறுவனம், இது தொடர்பாக நாங்கள் இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்து செய்திகள் வரும் என்று கூறி இருந்தது. தற்போது தமிழகத்தில் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1122 தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனால் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இப்படி ஒரு நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டள்ளது. எனவே, மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படங்களுக்கு 50 சதவீத ரசிகர்கள் மட்டும் படம் பார்க்க வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement