முன்பணத்தைக் கேட்டு போர்க்கொடி தூக்கும் விநியோகஸ்தர்கள் – மாஸ்டர் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
570
master
- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்தின் வெளியிட்டு விவரம் குறித்து படக் குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கொரோனாவுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி எங்களால் படத்தை வாங்க முடியாது என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். படத்தை வெளியிடுவதில் ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருப்பதால் பொங்கலுக்கு படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா பிரச்சனைக்கு முன் அதிக விலை கொடுத்து படத்தை ஒப்பந்தம் செய்து இருந்த விநியோகியோஸ்தர்கள் தற்போது திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் அதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களால் தொடர முடியாது. எனவே விலையை குறைத்து ஒப்பந்தம் செய்யுங்கள் என விநியோகஸ்தர்கள் கேட்டிருக்கிறார்களாம்.

- Advertisement -

ஆனால், மாஸ்டர் படத்தின் பட்ஜெட் பல கோடி என்பதால் படக்குழு விலை குறைப்பிற்கு பாடியவில்லையாம். இதனால் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிட திட்டமிட்டு Netflix நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக சமீபத்தில் பரவியது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படக்குழு வெளியீட்டு தொடர்பாக அதிகார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் கொண்டாட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

உங்களைப்போலவே அந்த ஒரு மிகப்பெரிய நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில தினங்களாக பல்வேறு வதந்திகள் சென்று கொண்டு இருக்கிறது அதனை தற்போது நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். எங்களுக்கு ஒரு பிரபலமான Ott நிறுவனம் மிகப்பெரிய சலுகையை வழங்கியிருந்தது. இருப்பினும் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். அது இப்படி ஒரு சிக்கலான தருணத்தில் திரைத்துறைக்கு மிகவும் தேவையான ஒருஉதவியாக இருக்கும் நேரத்தில் இந்த முடிவை எடுக்கிறோம். இந்தத் தருணத்தில் திரை அரங்க உரிமையாளர்கள் தமிழ் சினிமா துறையை மீட்டு கொண்டுவர உதவ வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement