முடிஞ்சா தொட சொல்லுடா பாப்போம் – தளபதி குரலில் வெளியான மாஸ்டர் படத்தின் இன்றைய ப்ரோமோ.

0
1319
master
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவாது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர்.மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை Ott யில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதினர்.இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்குகளில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை, 100 சதவீதமாக மாற்ற வேண்டி அவர் கோரிக்கை வைத்தாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் திரையரங்குகல் 100% பார்வையாளர்களுடன் இயங்க அராசானை வெளியாகி இருந்தது.

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துகொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று முதல் தினமும் மாலை மாஸ்டர் படத்தின் ப்ரோமோ வெளியாகும் என்று மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.இப்படி ஒரு நிலையில் இன்றைய தினத்திற்கான புதிய புறமும் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது இதில் முதல் முறையாக விஜய் குரலில் பேசிய மாசான வசனங்கள் இடம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement