சர்கார் படத்தின் முக்கியமான விஷயத்தை வெளியிட்ட ஏ. ஆர். முருகதாஸ்.! சரவெடி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

0
265
ar-murugadoss

இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளே முடிவடையாத நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

sarkar

ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள “சர்கார் ” படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் பாடல்களுக்கான ரெக்கார்டிங் படு மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் “சர்கார் ” படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அந்த விழாவில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் லைவ் பேர்பார்மன்ஸ் ஒன்றை கொடுக்க போகிறாராம்.

sarkar

இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். மேலும், இளையதளபதி விஜய்,அவரது படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால், இதுவரை இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் இதுவரை பாடியது இல்லை. தற்போது “சர்கார்” படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.