சினிமாவை பொறுத்து வரை ஒரு சில நடிகைகள் ஒரு சில படத்திலேயே காணாமல் போய்விடுகிறார்கள். அதில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் இருக்கிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து மெகா ஹிட் ஆனா ஷாஜகான் படத்தில் ஹீரோயினாகஅறிமுகமானார் ரிச்சா பலோட். ஆனால், அதன்பின்னர் காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.
இந்தியில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘லாமே’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர். கடந்த 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பெங்களூரில் பிறந்த இவர் தனது 16 வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். மாடலிங் துறையில் இருந்த போதே பல்வேறு விளம்பர படங்களில் நடித்தும் வந்தார் ரிச்சா.
மாடலிங் துறையில் இருந்த போது 100க்கும் மேற்ப்பட்ட விளம்பரங்களில் நடித்தார் ரிச்சா. இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு மிருகம் ஆதி நடிப்பில் வெளியான ‘யாகவாரயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்தார் ரிச்சா. அதன்பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் திரும்பிய ரிச்சா இரண்டு ஹிந்தி தொடரில் நடித்துள்ளார். ஆனால், சீரியல் பக்கமும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதன்பின்னர் ரிச்சாவிற்கு திருமண ஆகிவிட்டது.
இவர் இறுதியாக தமிழில் நடித்த ‘யாகவாரயினும் நாகாக்க’ படத்திற்கு முன்கவே இவருக்கு திருமணம் ஆகி விட்டது. திருமனதிக்ரு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இதுவரை தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடாத ரிச்சா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.