துப்பாக்கி சமந்தப்பட்ட 4,5 டைட்டில்கள் – விஜய் எந்த டைட்டிலை தேர்வு செய்துள்ளார் ?

0
1973
vijay65
- Advertisement -

இன்று மாலை வெளியாக இருக்கும் தளபதி 65 படத்தின் டைட்டில் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-
Thalapathy 65 Teaser - Target Title Track | Vijay 65 Latest Updates |  Nelson Dilipkumar | Aniruth - YouTube
fan made

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர். இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர்.

- Advertisement -

தற்போது டாக்டர் படத்தையும் இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு ‘டார்கெட்’, ‘ரைஃபிள்’, ‘புல்லட்’ என்று 4 , 5 டைட்டில்கள் பரிந்துரை செய்யப்பட்டதாம்.

#Vijay65

இதில் விஜய் எதை முடிவு செய்து இருக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த படத்திற்கு ‘டார்கெட்’ என்ற டைட்டிலை தான் தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது உண்மையா இல்லையா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். அதே போல நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாக இருக்கிறது.இதனால் விஜய்யின் ரசிகர்கள் முகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement