திருமலை படத்தில் முதலில் நடித்துள்ளது இந்த நடிகை தான் – திருப்தியில்லாமல் பாதியிலேயே நீக்கியுள்ள இயக்குனர்.

0
6739
thirumalai
- Advertisement -

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்த நடிகர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பது வழக்கமான ஒரு விஷயம்தான் ரஜினி கமல் தொடங்கி விஜய் அஜித் வரை தங்களுக்குள் பல்வேறு பட வாய்ப்புகளை தவறவிட்டு இருக்கிறார்கள். அதேபோல ஒரு சில நடிகர் நடிகைகள் ஒரு படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி கதைகளும் இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் ஜோதிகாவிற்கு முன் நடித்த ஒரு நடிகை பாதியிலேயே வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவரது பல்வேறு படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது அதேபோல இவர் தனது திரை வாழ்க்கையில் எண்ணற்ற தோல்விப் படங்களையும் சந்தித்து இருக்கிறார்.அந்த வகையில் திருமலை திரைப்படமும் ஒன்று. நடிகர் விஜய் பத்ரி திரைப்படத்திற்கு பின் நடித்த ஷாஜஹான், தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதிய கீதை போன்ற பல்வேறு படங்கள் தொடர் தோல்வியை அடைந்தது. அந்த வகையில் புதிய கீதை படத்திற்கு பின்னர் வெளியான திருமலை திரைப்படமும் தோல்வியைத் தழுவிய ஒரு படம்தான்.

- Advertisement -

2003 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ரமணா என்பவர் இயக்கி இருந்தார். இவர் பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி இடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார் இந்த படத்திற்கு முன்பாக நடிகை ஜோதிகா விஜயுடன் குஷி படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த படத்தில் ஜோதிகாவிற்கு முன்பாக முதலில் நடக்கவிருந்தது நம்ரத ஷிரோத்கர் என்ற நடிகைதான் இந்தப் படத்தில் முதலில் அவர் விஜய்யுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கும் விஜய்க்கும் இடையிலான ஸ்கிரீன் பிரசன்ஸ் சரியாக இல்லாததால் இந்த படத்தின் இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை இதனால் இந்த படத்தில் அவரை நீக்கிவிட்டு ஜோதிகாவை செய்து இருக்கிறார் இயக்குனர்.

நம்ரத ஷிரோத்கர் 1993 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். பின்னர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார் அதன்பின்னர் ஹிந்தி கன்னடம் மலையாளம் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு எந்த துறையிடம் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலம் ஏற்படவில்லை இறுதியாக இவர் 2004 ஆம் ஆண்டு இந்தியில் நடித்து இருந்தார் அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை ஒரு படத்திற்கு கதை ஆசிரியராகவும் எழுதியிருந்தார் அதிலும் இவர் பெரிதாக வெற்றிபெறவில்லை

-விளம்பரம்-
Advertisement