இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அவரது உறவினரான சேவியர் பிரிட்டோ தான் தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சேவியர் பிரிட்டோ கொடுத்த பேச்சுரை சமூகவலைதளத்தில் மிகுந்த கேலிக்கு உள்ளானது.
சமீபகாலமாக விஜய்யை மதம் குறித்து விமர்சித்து வருவது குறித்து பேசியுள்ள சேவியர். மற்றவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் கிடையாது. ஒருவேளை அவர் அப்படி இருந்தால் அவர் ஒரு இந்து பெண்ணை மணந்து இருக்கமாட்டா.ர் அவ்வளவு ஏன் அவரது தந்தை கூட இந்து பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். மேலும் என்னுடைய மகள் ஒரு இந்து பையனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். நான் இந்துக்களுக்கு கோவில்களை கட்டி கொடுத்திருக்கிறேன்.
அதேபோல இஸ்லாம் மதத்திற்கும் நிறைய உதவிகளை செய்திருக்கிறேன் என்னால் முடிந்தவரை அனைத்து மதங்களுக்கும் நான் உதவியை செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் மகளின் திருமணத்திற்கு தான் நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜான் பிரிட்டோவின் மகள் திருமணம் செய்து கொள்ளபோகும் நபர் வேறு யாரும் இல்ல நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ்.
ஆகாஷ் மற்றும் சினேகா இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் ஆகாஷ் மற்றும் சிநேகாவிற்கு நாளை (ஆகஸ்ட் 25) திருமணம் நடைபெற இருக்கிறது. மேலும், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே திருமண நிகழ்வில் இருப்பார்கள் எனத் தெரிகிறதுதிருமணத்தில் விஜய் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். திருமணத்தை முன்னிட்டு சென்னை முழுக்க ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியிருக்கும் 2500 பேருக்கு நாளை மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது