விஜய்யை மறைமுகமாக தாக்கி…அதிரடி முடிவை எடுத்த விஜய்சேதுபதி ! என்ன தெரியுமா ?

0
951

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் ஸ்ட்ரைக் தமிழ் சினிமா துறையில் பல பிரேச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்துவரும் இந்த ஸ்டரைக்கி ற்கு பலரும் ஆதரவு தெரிவித்து படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர் ஆனால் விஜய் நடித்து வரும் அவரது 62வது பட ஷூட்டிங் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று நடந்துவருகிறது. அதைத்தவிர மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களின் பட்டப்படிப்பு நடந்து வருகிறது.

vijay-62-poojai

சினிமாவில் ஒரு பெரிய நடிகரான விஜய் ஸ்டரைக்கை மீறி படம் நடத்தியதையடுத்து பல இயக்குனர்களும்,நடிகர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் கூட நடிகர் சிம்பு நேரடியாக சென்று தமிழ் சினிமாவில் ஒற்றுமை வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வரும் ஜூங்கா என்ற படத்தில் நடித்துவந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தயரிப்பாளர்கள் ஸ்டரைக்கினால் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது விஜய் மற்றும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடந்துவருகிறது,இதனால் நாம் மட்டும் ஏன் படப்பிடிப்பை நிறுத்தவேண்டும் என்று கூறி.நடிகர் விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் போர்சுகல் நாட்டிற்கு சென்றுவிட்டனர் .அங்கே 10 நாட்கள் ஜூங்கா படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

vijay sethupathi

ஏற்கனவே தடையை மீறி விஜய் படத்தின் படப்பிடிப்புகள் நடந்ததை பலரும் கண்டித்து வந்த நிலையில். தற்போது தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரபலமான நடிகர் தயரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவை மீறியுள்ளது சினிமா துறையில் ஒற்றுமை இல்லை என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது.