திருநங்கையாக நடிக்கும் சூப்பர் டீல்க்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் என்ன தெரியுமா ?

0
8151
vijay sethupathi
- Advertisement -

படத்திற்கு படம் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.சில நாட்களுக்கு முன்னர் லேடி கெட்டப்பில் இருந்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்தியது.

Vijay-Sethupathi-in-lady-getup

தமிழில் 2011 வெளியான ஆரண்ய காண்டம் என்ற ஒரு தரமான படத்தை அளித்த இயக்குனர் தயாக ராஜன் குமாரசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து சூப்பர் டீல்க்ஸ் என்ற படத்தை இயகியுள்ளர்.படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் மேலும் படத்தில் இயக்குனர் மிஷ்கினும் இந்த படத்தில் ஒரு பாதரியராகவும் நடக்கவுள்ளார்.மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முதன் முறையாக பெண் வேடமிட்டு அரவனியாக நடிக்கவிருக்கிறார் இந்த படத்தில் அவருடைய பெயர் “ஷில்பா” என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்டவிருக்கும் இந்த படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அமைந்திருக்கும் என்றும் இதனால் படம் சூது கவ்வும் போன்ற ஒரு காமெடி கலந்த திரில்லர் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கபடுகிறது.மேலும் படத்தில் ரம்யா கிருஷ்னன் ,வேலைக்காரன் படத்தில் நடித்த பாசில் உள்ளிட்ட பிரளங்கள் இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement